May 3, 2017
எப்போது மாறும் இந்த சோகம்?
ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியா உருவாகிறது, புதிய இந்தியா உருவாகிறது என்று மத்திய அரசு தங்களது ஆட்சியை வர்ணித்து வருகின்றது. ஆனால், மருத்துவமனைக்கு சடலத்தை எடுத்துச் செல்லக்கூட உதவிசெய்ய முடியாத சூழல்தான், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நிலவிவருகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஆம்புலன்ஸ் தராததால், ஒடிசாவில், தனது மனைவியின் சடலத்தைத் தோளில் சுமந்துசென்ற சம்பவம், நாடு முழுவதும் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவங்கள், மற்ற சில மாநிலங்களிலும் தொடர்ந்து நடந்தன. இந்த நிலையில், தினசரி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவரும், யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில், தற்போது இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி, தனது 15 வயது மகனுக்கு காலில் ஏற்பட்ட ஒரு பிரச்னையால் அவரை எட்டவா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதற்கிடையே, அவரைப் பார்த்த சில நிமிடங்களிலேயே, 'உங்களது மகன் உடலில் உயிர் இல்லை, எடுத்துச் செல்லுங்கள்' என்று கூறிவிட்டு மருத்துவர்கள் சென்றுவிட்டனர்.
Etawah: Man carries body of his son on shoulders after a govt hospital allegedly denies to provide ambulance or hearse
- ANI UP (@ANINewsUP) May 2, 2017
மேலும், அவரது மகனின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்துகொடுக்கப்படவில்லை. இதனால், தனது 15 வயது மகனின் உடலை, தனது தோளிலேயே சுமந்தபடி வீட்டுக்குச் சென்றுள்ளார் அந்த கூலித்தொழிலாளி.
எப்போது மாறும் இந்த சோகம்?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 03, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.