Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2017

மாட்டிறைச்சிக்குத் தடை இல்லை... மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தவே சட்டம்- தமிழிசை புது விளக்கம்


 மத்திய அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கவில்லை. மாட்டு விற்பனையை ஒழுங்குபடுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் வீணாக இதை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மாட்டு இறச்சிக்கு மாடுகள் விற்பனை செய்யவோ அல்லது வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா மாடு விற்பனை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா மற்றும் புதுவை முதலவர்கள் மாட்டிறைச்சி விறபனைக்கு தடை விதிக்க முடியாது என கூறியுள்ளனர்.


தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும், விவசாய சங்கங்களும் இந்த தடையுத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை,'' மத்திய அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை என்று கூறவில்லை. மாடு விற்பனைக்குத்தான் தடை விதித்துள்ளது.

அதாவது மாடுகளை விவசாயத்துக்கும் வேறு விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறோம் என வாங்கிச் சென்று இறைச்சிக்காக வெட்டுவதைத்தான் ஒழுங்குபடுத்தியுள்ளது. மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தவே இந்த சட்டம். ஆனால், அதற்குள் எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்'' என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.