
தமிழகத்தில் கருகலைந்ததால் மனவேதனை அடைந்த பெண் திருமண நாளன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையின் சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(28), இவருக்கு ராஜலட்சுமி(25) என்ற மனைவி உள்ளார். ராஜலட்சுமி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த 2-ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜலட்சுமி கர்ப்பமானதால் பணிக்கு செல்லவில்லை.
இதைத் தொடர்ந்து ராஜலட்சுமிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜாலட்சுமியின் கருகலைந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் மிகவும் சோகமாகவே இருந்துள்ளார். தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இதைப் பற்றி கூறி வருத்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் ஆனந்தகுமார்- ராஜலட்சுமிக்கு நேற்று முன்தினம் திருமண நாள் என்பதால் இருவரும் காலையில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர்.
கரு கலைந்த வேதனையில் இருந்து மீளாத ராஜலட்சுமி இரவு நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தனது அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ஆனந்தகுமார், மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
திருமணம் முடிந்து 2-ஆண்டுகளே ஆவதால் ராஜலட்சுமி தற்கொலை குறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.