May 16, 2017
வானாகிரை வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் பாதிக்கும்: சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை
உலக எங்கும் இன்று இணைய தாக்குதல் நடத்தப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வானாகிரை வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் நிலைகுலைந்துள்ள நிலையில் இ-மெயில் மூலம் அது தொடர்ந்து பரவுவதால் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வானாகிரை வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேபோல் இந்திய வங்கி நிர்வாகங்குளுக்கு சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானாகிரை இணையதள வைரசை அனுப்பி விஷமிகள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கணினி இணைப்புகளை முடக்கி உள்ளனர். இந்தியாவிலும் கேரள, ஆந்திரா மாநிலங்களில் வானாகிரை வைரஸ் தாக்கி உள்ளது.
வானாகிரை வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றி இணைய பாதுகாப்பு நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ள நிலையில் இன்று இணை தாக்குதல் நடத்துவதற்காக வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலக முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கணினிகளில் இ-மெயில்களையும் திறக்கும் போது இந்த வைரஸ் கிடுகிடுவென பரவுவதால் இதன் பாதிப்பு வரும் நாட்களில் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வானாகிரை வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் பாதிக்கும்: சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை
Reviewed by மறத்தமிழன்
on
May 16, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.