Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 22, 2017

அடங்காத வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை வெற்றி என தகவல்


வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி, அமெரிக்கா, தென் கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதனை செய்து, அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பானுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், கொரியா கடல்பகுதியில் தென்கொரியா, ஜப்பானுடன் இணைந்து போர்ப் பயிற்சியை நடத்தி எச்சரிக்கையும் விடுத்தது.

ஆனால், எதையும் கண்டுக்கொள்ளாமல் வடகொரியா தன் போக்கில் சோதனைகளை தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வடகொரியா சோதனை செய்தது. இதற்கு ஐ.நா. சபை உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன், வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை செய்தது. இது சுமார் 500 கி.மீ. தூரம் பாய்ந்து செல்லும் திறன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சோதனையை தொடர்ந்து, தன் நாட்டு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நடத்தினார். வழக்கம்போல், இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.