May 4, 2017
முல்லைப் பெரியாறு அணையில் இடையூறு செய்யும் கேரளா.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் கேரளாவுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரளாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜூலை 2வது வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி முல்லை பெரியாறு அணை உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி பெறப்பட்டது. அதற்குப் பிறகு தொடர்ந்து 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்காக 7.85 கோடி ரூபாய் அணையை பலப்படுத்துவதற்காக, சீரமைப்பதற்காக இன்றைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கேரள அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. அதனால்தான் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணையில் இடையூறு செய்யும் கேரளா.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Reviewed by மறத்தமிழன்
on
May 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.