May 12, 2017
இரு அணிகளும் இணையும்... மாஜி அமைச்சர் உறுதியாக சொல்றாரு...
இணையும்... இரு அணிகளும் இணையும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது உறுதி என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதனால் இரு அணிகளையும் சேர்ந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 17 முதல் 18 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கவேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். சேலத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் நாளை (இன்று) மாலை 5 மணியளவில், இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் மற்றும் பல்வேறு தலைவர்களும் இதில் பங்குபெறுவார்கள். அதேபோல், மிகமுக்கியமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிகப்பட்ட 56 கட்சிகளையும் அழைத்திருக்கிறோம்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் 8 முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிகப்படும். அதில் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யும் கட்சியை தேர்தலில் இருந்து ரத்து செய்ய வேண்டும். மேலும், வாக்குபதிவின் போது ரசீது முறையை பின்பற்றலாமா அல்லது தற்போது நிலுவையில் இருக்கும் மின்னணு வாக்கு முறையையே பயன்படுத்தலாமா என்று கலந்தாலோசிக்கப்படும்.
அணிகள் இணைப்பு குறித்து நாங்கள் தெரிவித்த நிபந்தனைகள் அனைத்தும் முழுமையாக ஏற்கப்படவில்லை. நிபந்தனைகள் அனைத்தும் ஏற்கப்படும் பட்சத்தில் பேச்சுவார்த்தை விரைவாக நடக்கும். மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பொது தேர்தல் வந்தால் ஓ.பி.எஸ். அணி நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரு அணிகளும் இணையும்... மாஜி அமைச்சர் உறுதியாக சொல்றாரு...
Reviewed by மறத்தமிழன்
on
May 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.