Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2017

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் - போலீசார் இடையே மோதல்.. போலீஸ் குவிப்பால் பதட்டம்!


சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மில்லர் சாலையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஒரே பைக்கில் ஒருவழிப் பாதை வழியாக வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு இருந்த போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். எதற்காக தடுத்து நிறுத்துகிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு விதி மீறி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் போலீசாருடன் மாணவர்கள் மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது மோதலாக மாறியுள்ளது. மேலும் அயனாவரம் உதவி ஆணையர் சங்கரனை கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவர்கள் மூன்று பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக புரசைவாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.