தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அதிக வெப்பநிலை நிலவி வருவதால் ஏரிகள், குளங்கள், கிணறுகள் என அனைத்தும் மிக வறட்சியாகவே காணப்படுகிறது.
தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாகவே ஒரு ஆண், 2 அல்லது 3 பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முறை மகாராஷ்டிராவில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் Denganmal கிராமத்தில் தான் இந்த நிலை உள்ளது, இங்கு தண்ணீர் எடுக்க பெண்கள் பல கிலோ மீற்றர் நடந்து செல்ல வேண்டும்.
காலையில் சென்றால் கிணற்றடியில் பல மணிநேரம் காத்துக்கிடந்து, அதன் பின்னர் கிடைக்கும் தண்ணீரை இடுப்பிலும், தலையிலும் வைத்துக்கொண்டு கால் கடுக்க நடந்து வருவார்கள்.
இப்படி, குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே எடுத்து வரும் தண்ணீர் குடும்ப வாழ்க்கைக்கு போதவில்லை.
எனவே அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் 3 அல்லது 4 பெண்களை திருமணம் செய்துகொள்ளும் முறை வழக்கத்தில் உள்ளது.
ஒரு ஆண், 3 பெண்களை திருமணம் செய்துகொண்டால், அந்த பெண்கள் சுமந்து வரும் தண்ணீர் குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாக உள்ளதால் இந்த முறை பின்பற்றப்படுகிறது.
இவர்கள் தண்ணீர் மனைவிகள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.