Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 12, 2017

வாரணாசி- கொழும்பு இடையே விமான சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு


கொழும்பு இடையே விமான சேவை வரும் ஆகஸ்ட் முதல் துவங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொழும்புவில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் (புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்) கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள ஆஸ்பத்திரியை திறந்து வைக்கவும், தமிழர்களை சந்தித்துப்பேசவும் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கொழும்பு புறப்பட்டார். அங்கு போய்ச் சேர்ந்த அவரை கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அந்த நாட்டின் பிரதமர் ரனில் விக்ரம சிங்கே வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயுடன் கொழும்பு நகரில் உள்ள 120 ஆண்டு பழமையான கங்கராமய்யா கோவிலின் அங்கமாக திகழ்கிற சீமா மாலகா புத்த கோவிலுக்கு சென்றார்.

இந்த நிலையில்,  இன்று புத்தமதத்தினரின் மிகப்பெரும் நிகழ்ச்சியான சர்வதேச வெசாக் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார்.  இந்த நிலையில் இலங்கை தலைநகரான கொழும்பு- வாரணாசி இடையே  நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஏர் இந்தியா  இந்த சேவையை துவங்கும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.