இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்வதாக சீனா தன்னுடைய தன்னார்வத்தினை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறது.
தென்னாசியாவில் தன்னை ஒரு வலிமையான மற்றும் சக்திவாய்ந்த நாடாக நிலைநிறுத்த காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்வதற்கு ஆர்வம் காட்டிவருகிறது சீனா. இதனை சீனாவில் வெளிவரும் 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகை ஒரு விரிவான செய்தியாகவே வெளியிட்டுள்ளது. இந்த 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சீனப் பதிப்பகமாகும். இதில் சீனா, பாகிஸ்தான்-சீன எல்லையில் சுமார் 50 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதால் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதில் மறைமுக ஆர்வம் காட்டிவருவதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த சீனா முயலும் என வெளிப்படையாகவே கூறப்பட்டு வருகிறது.
மேலும், அந்தப் பத்திரிகைக் கட்டுரையில், 'சீனா எப்போதும் அண்டை நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவதை விரும்பாது. அதற்காக சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள பகுதிகளில் முதலீட்டுப் பாதுகாப்புக்காக சில முயற்சிகளை மேற்கொள்வதிலிருந்து பின்வாங்காது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னுடைய பிராந்திய ஸ்திரத்தன்மையினை நிலைநாட்டவே எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்தியா- பாகிஸ்தான் இடையே நுழைவதற்கான வாய்ப்பினைப் பயன்படுத்தி வருவதாகவே தெரிகிறது.
தற்போது பாகிஸ்தானுடனான உறவினை வளர்க்கும் முயற்சியில் பெரும் அக்கறை செலுத்திவரும் சீனா, தன்னுடைய பத்திரிகையின் வாயிலாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.