Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2017

இலங்கை கொடியுடன் நடுக்கடலில் எல்லைப் பலகை


எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தினால் நடுக்கடலில் எல்லைப் பலகை வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதால், அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே செல்கின்றன.
எனவே, இதை தடுக்கும் நோக்கில் இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்கும் வகையில் எல்லைப் பலகையை இலங்கை அரசாங்கம் வைத்துள்ளது என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து 5ஆவது மணல்திட்டில் இலங்கை கொடியுடன் இந்தப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனுஷ்கோடியில் இருந்து 5வது மணல்திட்டில் இந்திய அராங்கம் எல்லைப் பலகை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.