Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

ஏன் இந்த வக்கிர புத்தி..? பெண்கள் குளிக்கும் இடத்தில் ஆண் போலீசாருக்கு என்ன வேலை..? குற்றாலத்தில்


பெண்கள் குளிக்கும் இடத்தில் ஆண் காவலர்கு என்ன வேலை ? இந்த நிலை தொடர்ந்தால் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு .? இதனால், குளிப்பதற்கு கூச்சப்படுகின்றனர்.
குற்றாலம் அருவி பகுதிகளில் பெண்கள் குளிக்கும் பகுதியில் ஆண் போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பெண் சுற்றுலா பயணிகள் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மலை யோரப் பகுதிகளில் பெய்த மழையால் குற்றாலத்தில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில் முதல்நாளில் அதிகளவு தண்ணீர் விழுந்த நிலையில் அதற்கடுத்த இரு நாட்களாக தண்ணீர் சுமாராகவே விழுகிறது.
இந்நிலையில் தற்போது விடுமுறை தினம் என்பதால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.
அருவி பகுதி களில் பெண்கள் குளிக்கும் பகுதியில் ஆண் காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் தாங்கள் பல்வேறு அவதிகளுக்கு ஆளாவதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் பெண் காவல்துறையினரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த
வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.