May 31, 2017
மாயமான இந்திய போர்விமானம்..! விமானிகள் மரணம்..!
இந்திய சீன எல்லைக்கோட்டிற்கு அருகே மாயமான சுகோய் 30 ரக போர் விமானத்தின் விமானிகள் இறந்துவிட்டதாக விமானப்படை அறிவித்துள்ளது.
அசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படை தளத்திலிருந்து சுகோய்30 ரக போர் விமானம் 2 விமானிகளுடன் கடந்த 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு வழக்கமான போர்ப்பயிற்சிக்கு புறப்பட்டது.
தேஜ்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள துபியா என்ற இடத்தின் அருகே பறந்துகொண்டிருந்த போது ரேடாரின் தொடர்பை இழந்தது.
ரேடாரின் தொடர்பை இழந்த பகுதி சர்ச்சைக்குரிய சீன எல்லையாகும்.
மாயமான விமானம் விபத்தில் சிக்கியதா? அல்லது அவசரமாக எங்கேனும் தரையிறக்கப்பட்டதா என்பது குறித்து விமானப்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் விமானத்தில் கருப்புப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 2 விமானிகளும் இறந்துவிட்டதாக விமானப்படை அறிவித்துள்ளது.
மாயமான இந்திய போர்விமானம்..! விமானிகள் மரணம்..!
Reviewed by மறத்தமிழன்
on
May 31, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 31, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.