Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 1, 2017

இந்தியா - துருக்கி இடையில் நட்பு ரீதியிலான வர்த்தக உறவு மேம்பட்டுள்ளது: பிரதமர் மோடி பேச்சு


இந்தியா - துருக்கி இடையில் நட்பு ரீதியிலான வர்த்தக உறவு மேம்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். துருக்கி அதிபர் எர்டோகன் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து பிரதமர் மோடியுடன் எர்டோகன் முக்கிய பேச்சு நடத்தினார். இதன் பின்னர் கூட்டாக இருவரும் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: எங்கள் தலைமையில் ஆட்சி அமைந்ததும் பல்வேறு முன்னேற்றங்கள் கண்டுள்ளோம். பொருளதாதரத்தில் பல்வேறு மாற்றம் கொண்டு வந்துள்ளோம். 50 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் அதிவேக ரயில் இயக்கம் என இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. துருக்கியை பொறுத்தவரை இரு நாடுகள் இடையே நல்லுறவு நீடிக்கிறது. பொருளாதார, வர்த்தக ரீதியிலான பல்வேறு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரு நாட்டு உறவு மிக பலமாக இருக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.