May 12, 2017
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோல்மால்? அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை
தலைமை தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டி, தேர்தல் சீரமைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளது. அதற்காக 8 தேசிய கட்சிகளுக்கும் 47 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையம் இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்கின்றன என குற்ற்ச்சாட்டு எழுந்ததையடுத்து இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரானிக் ஒடு இயந்திரம் மூலமே வாக்களிக்கப்படுகிறது. இது எளிமையானதாகவும் விரைவானதாகவும் உள்ளது என அனைவராலும் பாராட்டப்பட்டது.
ஆனால், அண்மையில் உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு நடந்தது என பெரும்பாலான கட்சிகள் குற்றம்சாட்டின. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பாஜக பெரும்ம்பான்மையான வெற்றியைப் பெற்றது.
பாஜகவின் இந்த வெற்றி வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ததால்தான் கிடைத்தது என ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் காங்கிரஸ் கட்சி குலாம் நபி ஆசாத்தும் அமளியை உண்டாக்கினார்கள். அதோடு நில்லாமல், பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து 'எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திர முறை வேண்டாம். பழைய வாக்கு சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும்' என மனு கொடுத்தார்கள்.
அதையடுத்து, தேர்தல் ஆணையம் இனி யாருக்கு ஓட்டுப் போட்டும் என்பதை தெரிவிக்கும் விதமாக ஒப்புகை சீட்டு வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது.
பாஜக, காங்கிரஸ், தேசியவாத கங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய தேசிய கட்சிகள் மற்றும் அதிமுக, திமுக உள்ளிட்ட மாநில மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம், ஒப்புகை சீட்டு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோல்மால்? அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை
Reviewed by மறத்தமிழன்
on
May 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.