Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2017

நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார்: அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தகவல்!


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்துடன் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்த நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு ஆறு மாத சிறைதண்டனை அளித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் நீதிபதி கர்ணன் முன்பே சென்னை புறப்பட்டு விட்டதால் அவரை கைது செய்ய மேற்கு வாங்க காவல்துறை துணைப்படை ஒன்று சென்னைக்கு விரைந்தது.

ஆனால் அவர் ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு சென்று விட்டதாக தகவல்  தெரிவிக்கப்பட்டதால்,காவல்படை அங்கும் சென்றது. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் நீதிபதி கர்ணன் சென்னையில்தான் இருக்கிறார்; எங்கும் தலைமறைவாகி சென்று விடவில்லை  என்று அவரது வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு விதிக்கப்பட்டுள்ள  ஆறு மாத சிறைத்தணடனையை திரும்ப பெறுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை கர்ணன் சந்திக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.