Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 16, 2017

ATM வைரஸ் வெறும் புரளி, மீண்டும் 500, 2000 ரூபாய் தடை? சத்தமில்லாமல் உத்தரவு!


இந்தியா முழுவதும் ATMகளில் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும், ATMகளில் பணம் எடுத்தால் ஆபத்து எனவும் பல செய்திகள் பரவி வருகின்றன.

அதாவது, கடந்த சில நாட்களாக ரான்சம்வேர் எனும் வைரஸ் கணினிகளை தாக்கி வருவதாகவும், இதனை யார் உருவாக்கினார்கள் என்று கண்டுப்பிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த தாக்குதல் இந்தியாவில் உள்ள வங்கி பணிகளை தாக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறினர். இதன் காரணமாக பணப்பரிமாற்றம் செய்தால் பெருமளவு மோசடி நடக்க வாய்ப்புள்ளதாகவும், ஒருவர் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம்ல் எடுக்கும்போது அந்த பணத்தை இணையவழி மூலமாக எளிதில் திருடிவிட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் வங்கிகளுக்கும், மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்ததாக செய்தி வெளியானது.

ஆனால், இதற்கு பின்னால், பெரிய சதியே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நாடு முழுவதும் பண தட்டுப்பாடு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக கூறப்படுகிறது.
மோடி அரசு, பழைய ரூபாய் நோட்டுகளை தடை செய்து , புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்த போது மக்கள் பண தட்டுப்பாட்டால் பெரும் அவஸ்தைக்கு ஆளாகினர். இதனால் , அதிக நபர்கள் இணையத்தில் பண பரிமாற்றம் அதாவது டிஜிட்டல் டிரான்சாக்‌ஷன் மூலம் பணப்பரிவர்தனை மேற்கொண்டனர்.

டிஜிட்டல் இந்திய திட்டத்தை தூக்கிப்பிடிக்க நடத்தப்படும் சத்திய ?

தற்போது, இதே வழிமுறை தான் பின்பற்றப்படுகிறது. அதாவது மீண்டும் பண தட்டுப்பாடு ஏற்பட்டால், மக்கள் டிஜிட்டல் டிரான்சாக்‌ஷன் தான் மேற்கொள்ள வேண்டும். அதனால், மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவு நினைவாகும் என்பதற்காக தான் இந்த வைரஸ் புரளி என பலர் கூறுகின்றனர்.

டிஜிட்டல் டிரான்சாக்‌ஷன், நடைமுறைக்கு வந்தால், பணம் அச்சிட தேவையில்லை என்றும், பண புழக்கம் குறைந்துவிடும் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.