Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற சென்ற யோகி ஆதித்யநாத்திற்கு AC சோபா கார்பெட்டுகள் என சிறப்பு ஏற்பாடுகள்!


யோகி ஆதித்யநாத் குறித்து மெகா பில்டப் கொடுத்த மீடியாக்களே  இப்போது இந்த நிகழ்வை போட்டு உடைத்துள்ளனர்  மீடியாக்கள் திருந்திவிட்டதோ?

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற சென்ற யோகி ஆதித்யநாத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அடாவடி தாக்குதலில் ராணுவ வீரர் பிரேம் சாகர் உயிரிழந்தார். அவருடைய உடல் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிதைக்கப்பட்டது. தியோரியா பகுதியில் உள்ள பிரேம் சாகரின் வீட்டிற்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சென்றார். குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற சென்றார். ஆனால் அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ராணுவ வீரரின் குடும்பத்தாரை அவமான அடைய செய்யும் அளவில் இருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

யோகி ஆதித்யநாத் வருகைக்காக ராணுவ வீரரின் வீட்டில் அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். கட்டி முடிக்கப்பட்டாத ராணுவ வீரரின் சிறிய வீட்டில் உடனடியாக ஏசி, சோபா, கம்பள விரிப்புகள், விலை உயர்ந்த நாற்காலிகள் உள்பட சிறப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து உள்ளனர். யோகி ஆதித்யநாத் எந்தஒரு அசெளவுகரியத்தையும் உணர்ந்துவிடாத வண்ணம் ஆடம்பரமான முறையில் உடனடியாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய ஜெனரேட்டர் வசதியும் உடனடியாக செய்யப்பட்டு உள்ளது.

 கிராமத்தை நோக்கிய அனைத்து சாலைகளும் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டு உளது. ஆதித்யநாத் வந்து சென்றதும் ராணுவ வீரரின் வீட்டில் செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து திரும்ப பெறப்பட்டது. ஏசி, சோபா உள்பட கொண்டுவரப்பட்ட அனைத்து பொருட்கள் அனைத்தும் அதிகாரிகள் எடுத்து சென்றனர். ஆறுதல் கூற வந்து அவர்களை அவமானப்படுத்தும் நிலைக்கு அங்கு சம்பவங்கள் நடந்து உள்ளது. மூங்கில் கம்புகளை கொண்டும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆதித்யநாத் சுமார் 25 நிமிடம் ராணுவ வீரர்களின் குடும்பத்தாரிடம் பேசிஉள்ளார்.

ராணுவ வீரரின் தந்தை பேசுகையில், அவர்கள் சிறப்பு ஏற்பாடு செய்து எங்கள் வீட்டிற்கு வந்து உள்ளனர், எங்களை அவமானப்படுத்தி உள்ளனர் என உணர்கிறோம் என கூறிஉள்ளார். யோகி ஆதித்யநாத் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ரூ. 6 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார், ஒருவருக்கு வேலை தருவதாகவும் வாக்குறுதி அளித்து உள்ளார்.

நன்றி: தினத்தந்தி  - 15.05.2017

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.