Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 21, 2017

570 கோடி கண்டெய்னர் கதை என்ன தான் ஆனது..?? ஒருவருடம் ஆகியும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்


கடந்த வருடம் திருப்பூர் அருகே செங்கம்பள்ளியில் மே 13ம் தேதி நள்ளிரவில் ரூ.570 கோடி ரூபாய் பணம் உள்ள 3 கண்டெய்னர்களை போலீசார் பிடித்தனர்.
காங்கிரஸ் ஆட்சியில் பிஜேபி ஆட்கள் மீதும், பிஜேபி ஆட்சியில் காங்கிரஸ் ஆட்கள் மீதும் ரெய்டு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் ஒன்றும் நடப்பதில்லை..கடைசியில் 570 கோடி கதைதான் ஆகும். ஒருவருடம் ஆகியும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை சிபிஐ..
இதில் அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கியுடையது என்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.. ஸ்டேட் வங்கியுடைய பணத்தை எதற்கு போலி நம்பர் பிளேட் போட்ட கண்டெயினரில் கொண்டு வரனும்.
கோவை பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து விசாகபட்டிணம் கிளைக்கு இந்த பணம் கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்டது.
அப்படி செல்லும் போது சம்பந்தமில்லாமல் திருப்பூருக்கு ஏன் வர வேண்டும்? பணம் எடுத்துச்செல்லும் வழியில் திருப்பூர் இல்லையே?
இதிலிருந்தே அந்த பணம் ஹவாலா பணமா? அரசியல்வாதிகளுடையதா? என்ற சந்தேகம் எழுகிறது. இதில் யாரை நம்புவது?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.