மத்திய அரசு செல்லாது என அறிவித்த பழைய ரூ 500, 1000 நோட்டை வசதிபடைத்தவர்கள் வைத்து கொண்டு என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். அளவிற்கு அதிகமாக வைத்திருந்தால் ஜெயில் தான்.
அதே 500 ரூபாய் நோட்டில் மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார் ஒடிசா, நியாபடா மாவட்டத்தை சார்ந்த லச்மன் துந்தி என்ற 17வயது இளைஞர்.
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தானே பல்ப் தயாரித்து, விற்பனை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தை வைத்து கல்லூரில் படித்து வருகிறார்.
ரூபாய் நோட்டில் மின்சாரம் தயாரித்தது குறித்து அவர் கூறுகையில், செல்லாத ரூபாய் நோட்டை கிழித்து எறிந்த போது, சூரிய ஒளியில், ரூபாய் நோட்டின் மீது இருந்த சிலிக்கான் பூச்சு இருப்பதை கண்டுபிடித்தேன். அந்த சிலிக்கான் பூச்சில் எலக்ரிக் வயரை இணைத்து, டிரான்ஸ்பார்மருடன் பொருத்தி, மின்சாரத்தை தயாரித்தேன்.
ஒரு 500 ரூபாய் நோட்டில் இருந்து 5 வோல்ட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும் . இதனை தயாரிக்க 15 நாட்கள் மட்டுமே ஆனது, முதலில் எனது கல்லூரியில் செய்து காண்பித்தேன். அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் இது குறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதினேன்.
எனது கண்டுபிடிப்பை பிரதமர் பாராட்டினால் அதுவே எனக்கு கிடைத்த பெருமையாக நினைப்பேன், என்றார். இந்நிலையில், இந்த கண்டுபிடிப்பு குறித்து பிரதமர் அலுவலகம், இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து அனுப்பு படி ஒடிசா அரசுக்கு ஏப்.,12ம் தேதி கடிதம் அனுப்பபட்டுள்ளது.
ஒடிசா அரசும் சம்பந்தபட்ட துறைக்கு அறிவுறுத்தி, அறிக்கை தயாரித்து மே17ம் அன்று பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தகவல் பரவ துவங்கியதையடுத்து லச்மனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.