Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2017

ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.451 கோடி கட்டண நிலுவை: ஆர்டிஐ தகவல்


குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகிய மிக முக்கிய பிரமுகர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக தனி விமானங்களை இயக்கிய வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.451 கோடி கட்டண நிலுவை வைத்திருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காகவே, மூன்று போயிங் 747-400 ரக விமானங்களை ஏர் இந்தியா வைத்துள்ளது. மேலும், உள்நாட்டுப் போர் நிகழும் நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளுக்காகவும், வெளிநாட்டுத் தலைவர்கள் பயணிப்பதற்காகவும் சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.
இதுபோன்ற விமானங்களை இயக்கிய வகையில், கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு மார்ச் மாதம் வரை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு சுமார் ரூ.451 கோடி கட்டண நிலுவை வைத்துள்ளது.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர், ஆர்டிஐ சட்டத்தின் வாயிலாக பெற்ற தகவல்கள் வருமாறு:
கடந்த 2016 நவம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், உஸ்பெகிஸ்தான், வியத்நாம், தாய்லாந்து உள்ளிட்ட 6 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட சுற்றுப் பயணங்களுக்காக தனி விமானத்தை இயக்கிய வகையில் ரூ.47.37 நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு வரை துணை குடியரசுத் தலைவர் மேற்கொண்ட 22 வெளிநாட்டுப் பயணங்களுக்கான ரூ.206 கோடி கட்டணத் தொகை இன்னமும் நிலுவையில் உள்ளது.

அத்துடன், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இராக், மால்டா, கெய்ரோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை இயக்கியது என மொத்தமாக ரூ.451 கோடி கட்டண பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்தக் கோரி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டுவரை வெளியுறவு அமைச்சகம் உள்பட பல்வேறு அமைச்சகங்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் 31 கடிதங்கள் எழுதியிருப்பதும் ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.