May 22, 2017
சென்னையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட போலி பத்திரிகையாளர் அன்பழகன் உட்பட 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த போலி பத்திரிக்கையாளர் உட்பட 20 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் தொடர் கொலை,திருட்டு, செயின் பறிப்பு, பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது ெசய்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து வருகின்றனர். அதன்படி அரசு அதிகாரிகளை தொடர்ந்து பணம் ேகட்டு மிரட்டி பணம் பறித்து வந்த பூந்தமல்லி, மல்லியம் நரசிம்மன் நகர் பகுதியை சேர்ந்த அன்பழகன்(56), அரும்பாக்கம், என்எஸ்கே.நகரை சேர்ந்த கார்த்திக்(23), வியாசர்பாடி, முல்லை நகரை சேர்ந்த மோகன்ராஜ்(27), அயனாவரம், கே.கே.நகரை சேர்ந்த சங்கர்(41), பேய் ஹேமநாதன்(எ) ஹேமநாதன்(25),
தண்டரை பட்டபுரத்தை சேர்ந்த சின்ன சங்கர்(எ) மாட்டு சங்கர்(எ) சங்கர்(33), திருவள்ளூவர் மாவட்டம் திருமழிசையை சேர்ந்த கவுதமன்(23), வியாசர்பாடி, முல்லைநகரை சேர்ந்த சபாபதி(24), பட்டபிரம், சித்துக்காடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(46), செங்குன்றம், ஆட்டந்தாங்கலை சேர்ந்த மணிவண்ண(எ) கஞ்சா மணி(25), ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராஜன்(எ) துண்டுபீடி ராஜன்(39),புளியந்தோப்பு, காந்தி நகரை சேர்ந்த சேட்டு(எ)கார்த்திக்கேயன்(29), மருரவாயல் பகுதியை சேர்ந்த கணபதி(எ) சரவணன்(24), மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையை சேர்ந்த அஜித்குமார்(21), ஜெயசீலன்(24), மதுரவாயல், 5வது பிளாக்கை சேர்ந்த விக்கி(எ)விக்னேஷ்(24), குட்டி(எ)ராஜ்குமார்(24), அஜித்(23),டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த நிஷாந்தி(24), ஆயிரம் விளக்கு பகுதியை ேசர்ந்த சார்லஸ்(27) ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
சென்னையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட போலி பத்திரிகையாளர் அன்பழகன் உட்பட 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Reviewed by மறத்தமிழன்
on
May 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.