May 23, 2017
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி இடதுசாரி தொண்டர்கள்– போலீஸ் மோதலில் 200 பேர் காயம்
மேற்கு வங்காளத்தில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. அதில், ஊழல் மலிந்து விட்டதாகவும், விலைவாசி உயர்ந்து விட்டதாகவும் கூறி, நேற்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதை முறியடிக்க தலைமை செயலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்
டது. 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டன. அதையும் மீறி, பல்வேறு இடங்களில் இருந்து தலைமை செயலகத்தை முற்றுகையிட இடதுசாரி தொண்டர்கள் ஊர்வலமாக வந்தனர். தடுப்புகளை அகற்ற முயன்றனர்.
அவர்களை தடுத்த போலீசார் மீது கற்களை வீசினர். போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இந்த மோதலில், இடதுசாரி தொண்டர்கள் 120 பேரும், போலீசார் 80 பேரும் காயம் அடைந்தனர்.
பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 217 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின்போது, மம்தா பானர்ஜி வெளியூர் சென்று இருந்தார்.
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி இடதுசாரி தொண்டர்கள்– போலீஸ் மோதலில் 200 பேர் காயம்
Reviewed by மறத்தமிழன்
on
May 23, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.