Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 16, 2017

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள் உள்பட 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை: தமிழகத்தில் முக்கிய துறைகளில் பணிபுரிந்து வரும் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டேல் - மின் ஆளுமை ஆணையர்

இன்னசன்ட் திவ்யா- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர்


பிரபுசங்கர் - திண்டிவனம் சார் ஆட்சியர்

ஷமீரன்- மீன் வளதுறை கூடுதல் ஆட்சியர், ராமநாதபுரம்

ஆகாஷ்- சேரன்மகாதேவி சார் ஆட்சியர்

லலிதா- பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர்

அமர் குஷாவா- உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர்

ராகுல்நாத்- கன்னியாகுமரி மாவட்ட ஊரக மேம்பாட்டு துறை செயலர்

கஜலட்சுமி- சேலம் மேக்னசைட் லிமிட்டெட் மேலாண் இயக்குனர்.

ஸ்ரீதர்- தர்மபுரி சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.