திருச்சியில் நான்காம் ஆண்டு படிக்கும் பொறியியல் மாணவர்கள் 4 பேர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 376 கி.மீ. ஓடும் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
பெட்ரோல் மூலம் இயங்கும் போது, இரண்டு சக்கரங்களில் சுழற்சியின் மூலம் மின்சாரம் தயாரிக்கின்றனர். அதை 8 பேட்டரிகள் மூலம் சேமித்து வைக்கின்றனர். பின்னர், பேட்டரி மூலம் வாகனத்தை இயக்கி சாதனை செய்துள்ளனர்.
இதன் மூலம் சுற்றுச்சூழலையும், பாதுகாக்க முடியும் என்றும், பெட்ரோல் பயன்பாட்டின் அளவு குறையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் னபூஏஐ என்ற செய்தி நிறுவனத்திடம் அனுப்பியதாகவும், அவர்கள் செய்தியாக வெளியிட்டுள்ளதாகவும், சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் இந்த வாகனத்திற்கு ஓல்டாலைன் பைக் என்று பெயரிட்டுள்ளனர்.
இது போன்று கண்டுபிடிப்புகளுக்கு அரசு உரிய அங்கீகாரம் அளித்தால், மேலும் பல கண்டுபிடிப்புகளை மக்கள் பயன்பாட்டிற்காக தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.