Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சீமான்!!


டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதராவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்.
டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 33 நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசிக்க தி.மு.க இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்நிலையில் சீமான் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகிறார்.


போராட்டத்தின் போது பேசிய சீமான், "விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. மத்திய அரசு விவசாயிகளை அவமதித்துவிட்டது. விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க இன்று தி.மு.க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதால் புனிதமடைந்துவிடாது. தி.மு.கவின் திட்டங்களால்தான் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்: என்று கடுமையாக சாடி உள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.