ஒரு சமயம் பட்டிகாட்டு பொன்னையா படபிடிப்பு மைசூர் பகுதியில் சூட்டிங் நடந்தது. காலையில் எம்ஜிஆர் சூட்டிங் ஸ்பாட் வந்து விட்டார்.
மேக்கப் போட்டு விட்டு தளத்திற்கும் வந்து விட்டார். இயக்குனர் பயங்கர சோகத்தோடு அமர்ந்திருந்தார். சூட்டிங் நடப்பதற்கான அறிகுறிகளே இல்லை.
சம்திங் ராங் என்று புரிந்து போனது. தனது உதவியாளர் செல்வராஜை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டுள்ளார்.
அவரோ மெல்ல குனிந்து அம்மா ஹோட்டல்ல ரெடியா இருக்காங்க ஆனா பட முதலாளி கொஞ்சம் பணம் தரணுமாம் கொடுத்தால் தான் ஸ்பாட்டுக்கு வருவாங்களாம் என்று கூறினார்.

எம்ஜிஆர் அம்முவிற்கு கார் அனுப்புங்கள் என்று கூறி செல்வராஜ் காதில் எதோ கூறி அவரையும் காரில் அனுப்பி வைத்தார்.
அடுத்த பத்தாவது நிமிடம் ஜெயலலிதா சூட்டிங் ஸ்பாட் வந்து விட்டார். படப்பிடிப்பும் ஆரம்பம் ஆனது. எம்ஜிஆர் என்ன சொல்லி அனுப்பினார் தெரியுமா..?
“பணத்தை தின்ன முடியாது அம்மு.. முதலாளிங்க கஷ்டத்தை உணரனும்..பணம் தான் வாழ்க்கைன்னு நினைச்சா அது நம்மைக் காப்பாற்றாது..” என்று கூற உடனே கிளம்பி வந்தாராம் ஜெயலலிதா..! எவ்வளவு பெரிய உண்மை..!
எத்தனை ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் அனாதையாக தான் இறந்தார் ஜெயலலிதா.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.