Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2017

ஏரோமொபில் நிறுவனம் உருவாக்கிய பறக்கும் கார்


கடந்த 10 ஆண்டுகளாக பறக்கும் காரை உருவாக்கிக் கொண்டிருந்த ஸ்லோவாகியாவை சேர்ந்த ஏரோமொபில் நிறுவனம், தற்போது தயாரான வைத்துள்ளது. ஏரோமொபில் என்று அழைக்கக்கூடிய இந்த வாகனத்தை நூற்றுக்கணக்கான மேம்பாடுகளுடன் வடிவமைத்துள்ளனர். இந்த கார், வரும் ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் சிறந்த மார்க்கஸ் மொனாக்கோ சூப்பர் கார் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த பறக்கும் கார் சாலை மற்றும் வானில் செல்லக்கூடிய வகையில் வடிவமைத்துள்ளதால், தனிப்பட்ட போக்குவரத்துக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதாவது நமக்கு விரும்பமான முறையில் போக்குவரத்து தேர்வு செய்து கொள்ளலாம். கார் மற்றும் விமான தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பறக்கும் காரை வானிலும், சாலையிலும் செலுத்த முடியும், அதனால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கலாம்.

கார் மற்றும் விமானத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் காரின் உள்கட்டமைப்பில் ஒட்டுநர் இருக்கை விமானி அறை போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. காரிலிருந்து பறக்கும் காராக மாறவும், பறக்கும் காரிலிருந்து சாலையில் செல்லும் காராக மாறவும் ஒரு பட்டனை அழுத்தினால் போதுமானது. சாலையில் கார் இருந்தால், பின் சக்கரங்கள் உள்ளே மடக்கப்பட்டு முன் பாகம் கொஞ்சம் தூக்கியவாரே கார் மேல செல்லக்கூடிய திறன் பெற்றுள்ளது. இந்த பறக்கும் காரை ஓட்ட நிச்சயம் வாடிக்கையாளர் விமான ஓட்டுநர் உரிமத்தை பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த வாகனத்தை காராக பயன்படுத்தும்போது, வாகனத்தின் வரம்பு 310 மைல்களாகவும், 5 அடி நீளமும் இருக்கும். மேலும் எடை குறைவான ஸ்டீல் ஃபிரேம்ஒர்க் மற்றும் கார்பன் கோட்டிங் உடன் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த பறக்கும் கார், விமானமாக மாறும்போது, 26 அடி அகலம் மற்றும் 19 அடி நீளமும் இருக்கும். இந்த பறக்கும் காரில் இரண்டு பேர் மட்டுமே செல்லமுடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.