Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2017

பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் அரசு பெண்களை பாதுகாப்பது இல்லை - ஜெயா பச்சன்


மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டுவருபவருக்கு ரூ11 லட்சம் தருவதாக பாரதீய ஜனதா இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே அறிவிப்பு வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பிரச்சனையை இன்று எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தன. இவ்விவகாரத்தில் மேற்கு வங்காள அரசு என்ன நடவடிக்கையும் எடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இவ்விவகாரம் தொடர்பான அமளியானது மாநிலங்களவை நிலவிய போது சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ஜெயா பச்சன் பேசுகையில்  “பெண்களை பாதுகாக்க தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நீங்கள் பசுக்களை பாதுகாக்கிறீர்கள் ஆனால் பெண்கள் மீதான அட்டூழியங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது” என்றார். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா அரசு அமைந்த பின்னர் சட்டவிரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோன்று பிற பா.ஜனதா அரசுக்களும் பசுவதைக்கு எதிரான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.