April 2, 2017
எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு: வாக்கு பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு அம்பலம்
மத்திய பிரதேசத்தில் பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட ஓட்டு இயந்திர சோதனையின் போது எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னம் பதிவானதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்தன. இவற்றில் நான்கில் பாஜ ஆட்சியை கைப்பற்றியுள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு வேலைகள் நடந்ததாக மாயாவதி, கெஜ்ரிவால் ஆகியோர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மத்திய பிரதேசத்தில் பின்ட் மாவட்டத்தில் உள்ள அட்டர் சட்டமன்ற தொகுதியில் வருகிற 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக பத்திரிக்கையாளர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் ஓட்டு இயந்திரங்கள் வேட்பாளர்களின் சரியான சின்னத்தில்தான் வாக்குபதிவு செய்யப்படுகிறதா என்பதற்கான சோதனை மற்றும் செய்முறை விளக்கம் நடைபெற்றது. இதற்காக வாக்கு பதிவு இயந்திரங்களுடன் ரசீது வழங்கும் இயந்திரங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அப்போது வந்திருந்தவர்கள் பல்வேறு சின்னங்களில் உள்ள பொத்தான்களை அழுத்தி சோதனை நடத்தினர். அதில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அச்சடிக்கப்படும் ரசீதில் தாமரை சின்னம் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்தது. இதை கண்டு அதிகாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் மூலம் அங்கு ஓட்டு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடைபெற்றுள்ளது என்பது அம்பலமானது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தற்போது எதிர்கட்சிகள் அளித்த புகாரின் பேரில் ஓட்டு இயந்திர மோசடி குறித்து விசாரணை நடத்தவும், இது குறித்து விளக்கம் அளிக்கவும் பின்ட் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இந்த சம்பவத்தை சுட்டி காட்டி அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்ட மன்ற தேர்தல்களில் ஓட்டு இயந்திர தில்லுமுல்லு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு: வாக்கு பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு அம்பலம்
Reviewed by மறத்தமிழன்
on
April 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.