Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2017

மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய போலீஸ்காரர் கைது


களியக்காவிளை அருகே மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 12 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரது புகைப்படத்தை அவரது தந்தை தனது வாட்ஸ்-அப் புரோபைலில் வைத்திருந்தார். அந்த படத்தை மர்ம நபர் ஒருவர் எடுத்து சில ஆபாச படங்களை இணைத்து அந்த படத்தின் கீழ் அந்த மாணவியின் புகைப்படத்தையும் வைத்து அதே எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ்காரர் சிக்கினார்
மாணவியின் தந்தைக்கு அனுப்பிய புகைப்படம், எந்த செல்போன் நம்பர் மூலம் வந்தது என்பதை கண்டறிந்து அதன் மூலம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். மாணவியின் தந்தை புகார் கொடுத்த 2 நாட்களில் சம்பந்தப்பட்ட செல்போன் நம்பர் குமரி மாவட்டத்தில் இருந்ததும், அதன் பிறகு சென்னை குமரன்நகர் போலீஸ் நிலையத்தில் இருந்ததாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் அந்த நம்பர் செயல் இழந்த நிலையில் காணப்பட்டது.

இதனையடுத்து போலீசார், தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் சென்னை குமரன்நகர் போலீஸ் நிலையத்தில் உளவுப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரியும் செந்தில் (வயது 44) என்பவரை பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரர் செந்தில் தான் மாணவியை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியது தெரியவந்தது.

சிம்கார்டுகள் பறிமுதல்
மேலும் அவரை பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

போலீஸ்காரர் செந்திலின் சொந்த ஊர் குமரி மாவட்டம் படந்தாலுமூடு மடிச்சல் பகுதி ஆகும். சென்னை குமரன்நகர் போலீஸ்நிலையத்தில் பணிபுரியும் அவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தனர்.

பல மாணவிகளுக்கு செந்தில் ஆபாச புகைப்படம், வீடியோ அனுப்பியும் உள்ளார். இதுபற்றி அவர்கள் போலீசாரிடம் புகார் அளிக்காததால் வெளியே தெரியாமல் இருந்துள்ளது. செந்திலிடம் இருந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் வாங்கிய 12 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் அடிக்கடி சிம்கார்டுகளை மாற்றி, மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செந்திலை நேற்று களியக்காவிளை போலீசார் கைது செய்தனர். பிறகு குழித்துறை கோர்ட்டு நீதிபதி அப்துல்சலாம் முன் போலீஸ்காரர் செந்திலை ஆஜர்படுத்தி குழித்துறை சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.