April 18, 2017
'விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகப் போகிறது...'- பிரதமர் மோடி பேச்சு
தன் சொந்த மாநிலமான குஜராத்துக்குப் பயணம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில நாள்களாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், 'என் தலைமையிலான அரசு தொடர்ந்து விவசாயத் துறையில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. விவசாயத்தில் புதுவித தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதைப் பலப்படுத்தி வருகின்றோம். இந்த நடவடிக்கையின் மூலம், வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது.' என்று பேசினார்.
அவர் மேலும், 'சுத்தமான தண்ணீரால் ஆரோக்கியமான ஒரு இந்தியாவை நாம் உருவாக்க முடியும்' என்றும் கூறியுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், மோடி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கியும் கூட்டங்களில் கலந்துகொண்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
'விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகப் போகிறது...'- பிரதமர் மோடி பேச்சு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.