April 22, 2017
கள்ளக்காதலியுடன் உல்லாசம்: மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்
கள்ளக்காதலியுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி மூவேந்திரன் தெருவைச் சேர்ந்தவர் கபிலன். இவருக்கும் நதியா என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் கபிலன் புதுக்கோட்டையைச் சேர்நத ரம்யா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார்.
மனைவியின் நகைகள் அனைத்தையும் பறித்து வைத்துக் கொண்டு மேலும் 20 பவுன் நகை கேட்டு கொடுமைப்படுத்தினார்.
இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நதியா புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்த தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மனைவியை கொடுமைப்படுத்திய கபிலன், மாமியார் சுசீலா, கள்ளக்காதலி ரம்யா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்காதலியுடன் உல்லாசம்: மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்
Reviewed by மறத்தமிழன்
on
April 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.