April 26, 2017
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
பத்திரப்பதிவுத்துறை, வணிகவரித்துறை, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வட்டாட்சியர்கள், உள்ளிட்ட 64 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் நிதி அமைச்சர் ஜெயக்குமார், பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அரசு ஊழியர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்
Reviewed by மறத்தமிழன்
on
April 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.