Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2017

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு


ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தேசிய நதிகளை இணைக்க வேண்டும், தமிழகத்திற்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர், அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தினந்தோறும் நூதன முறையில் போராடி வந்தார்கள். எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மரத்தில் ஏறி தற்கொலை முயற்சி, இலை, தழைகளை சாப்பிடுதல், மீசை, தாடியை மழித்தல், மொட்டை அடித்தல், அங்க பிரதட்சணம், ஆடைகளை கிழித்தல், சாட்டையடி, தாலி அறுத்தல், நிர்வாணம், இறுதிக்கட்டமாக சிறுநீர் குடித்தல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.

இன்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றிருந்தார். அப்போது தமிழக விவசாயிகளை சந்தித்தார். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது விவசாயிகளினுடைய பிரதிநிதிகள், அதனுடைய தலைவர் அய்யாக்கண்ணு வைத்த கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்தி கூறுவேன். விவசாயிகளுக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எனவே தமிழக விவசாயிகள் தங்களின் 41 நாள் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு உத்தரவாதம் கொடுத்ததாக தெரிகிறது. 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதனால் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தங்களது போராட்டத்தை சுமார் ஒருமாதம் காலத்திற்கு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். அதாவது அடுத்த மாதம 25-ந்தேதி வரை ஒத்தி வைத்துள்ளனர். மேலும், நாளைமறுநாள் தமிழகத்தில் நடைபெற இருக்கும் போராட்டத்திலும் கலந்து கொள்ள இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.