April 24, 2017
ஜெ.வின் கொடநாடு எஸ்டேட்டில் பயங்கரம்- காவலாளி அடித்து கொலை- ஆவணங்கள் அபேஸ்?
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் அண்மையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டபோது இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டது.
இச்சம்பவம் நிகழ்ந்த சில நாட்களிலேயே ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் முக்கியமான ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அந்த ஆவணங்களை அபகரிக்க முயன்றபோது இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெ.வின் கொடநாடு எஸ்டேட்டில் பயங்கரம்- காவலாளி அடித்து கொலை- ஆவணங்கள் அபேஸ்?
Reviewed by மறத்தமிழன்
on
April 24, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.