Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2017

நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரனுக்கு பிடிவாரண்ட்!


நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

: நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து குடிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 29 ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை டவுண் பகுதியில் உள்ள லட்சுமி தியேட்டர் எதிர்புறம் ஆதினத்திற்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. கடந்த 2010 ஆண்டு இந்த இடத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து கட்டிடம் கட்டியுள்ளார். இதுதொடர்பாக ஆதினம் தரப்பில் கடந்த 2010-ம் ஆண்டு நெல்லை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

அலங்காநல்லூர் வாடி வாசல் தயார்..
இதுதொடர்பான விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கில் வரும் 29-ந் தேதி நெல்லை உரிமையியல் நீதிமன்றத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.