Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2017

பிரபலங்களின் லீலைகளை வெளியிட்ட பாடகியின் லீலைகள் வெளியானது! இதல்லாம் சகஜமப்பா!!


திரையுலக பிரபலங்களின் லீலைகளை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகியின் லீலைகளும் தற்போது வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். திரையுலக பிரபலங்கள் பலரின் திரைமறைவு லீலைகளை பிரபல பின்னணி பாடகியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி திரையுலகையே பரபரப்பாகியது.

அதில், கொலவெறி நடிகரை சுற்றித்தான் நிறைய புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்தது. அதேபோல், கொலவெறி நடிகர் மீதான தாக்குதல்கள்தான் அந்த டுவிட்டரில் அதிகப்படியாக இருந்தது. இந்நிலையில், கொலவெறி நடிகரின் ரசிகர்கள் அந்த பின்னணி பாடகிக்கு எதிராக கிளம்பியுள்ளார்களாம். தங்களுடைய தலைவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடும் பின்னணி பாடகி மட்டும் ஒழுங்கா? என்று கேள்விகளும் எழுப்பி வருகிறார்களாம்.

மேலும், பின்னணி பாடகி, பொது மேடையிலேயே மற்ற நடிகர்களுடன் எப்படி நெருக்கமாக ஆடிப்பாடுகிறார்? என்பதற்கு சான்றாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார்களாம். அந்த வீடியோவில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிரத்யேகமான நிகழ்ச்சி ஒன்றில் பாடகி, தான் பாடிய பாட்டுக்கு ஒரு நடிகரோடு சேர்ந்து நடனமாடுகிறார்.

நடனத்தின்போது அந்த நடிகரை வலியப் போய் பாடகி இழுத்து, கட்டிப் பிடித்து ஆடுவதுபோல் உள்ளது. நடிகருடன் வலியப்போய் நெருங்கி ஆடும் இந்த பின்னணி பாடகி, மற்றவர்களின் அந்தரங்கத்தை பற்றி குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? என்பதுதான் அந்த ரசிகர்களின் ஆதங்கம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.