Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2017

இறைச்சியுடன் இதனை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து: எச்சரிக்கை தகவல்


அசைவ உணவுகளில் ஒன்றான இறைச்சி செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுப்பதால், அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் சில உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

தேன் vs இறைச்சி

சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இந்த காம்பினேஷனை ஆயுர்வேதத்தில் 'ஆம விஷம்' என்று கூறுவர். இது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

முள்ளங்கி vs இறைச்சி

வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு.

கிழங்கு வகைகள் vs இறைச்சி

பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுப்பொருட்கள் உண்பதை பெரும்பாலும் தவிர்ப்போம். கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். மேலும் இந்த காம்பினேஷன் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லையை உண்டாக்கும்.

உளுந்து vs இறைச்சி

கறுப்பு உளுந்துடன் இறைச்சியைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு, குமட்டல், வாந்தி, படபடப்பு உண்டாக்கும்.

பயறு vs இறைச்சி

முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றபோதிலும் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்.

கீரை vs இறைச்சி

இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.