April 29, 2017
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மரணமடைந்திருக்க வாய்ப்பு?
நிழல் உலக தாதா' தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச குற்றவாளியான தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பாகிஸ்தான் கராச்சி நகரில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவுதான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாவூத் இப்ராகிம், 61. 1980களில் மும்பையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 'நிழல் உலக தாதா'. 1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை பிடிக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானிடம் உதவி கேட்டும் எந்தவித பிரயோஜனமும் இல்லை.
ஆனால் நமது பிரதமர் மோடி அவர்கள் பாக்கிஸ்தான் பிரதமர்களுக்கு மட்டும் பிறந்தநாள் வாழ்த்து மட்டும் தொடர்ச்சையாக கூறிவருகிறார் யாருக்கும் தெரியாமல் நவாஸ் ஷரீப் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டு வந்ததும் பின்னல் ஊடகங்களில் அம்பலப்பட்டதும் வேறுவிஷயம்...
தாவூத்துக்கு மாரடைப்பு
இதற்கிடையில், தாவூத் இப்ராகிமின் உடல்நிலை குறித்து சில நாட்களாக தொடர்ந்து பலவிதமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், தாவூத் இப்ராகிமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கராச்சி நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வந்த தாவூத் இப்ராஹிம் உயிரோடு இருப்பதற்காக வாய்ப்பும் குறைவு என்றும் கூறப்படுகிறது.
மறைக்கும் பாகிஸ்தான்
தாவூத் உடல்நிலை குறித்த தகவல்களை பாகிஸ்தான் அரசு மறைத்து வருவதாக இந்தியா கூறிவந்தது. இந்நிலையில், தாவூத் குறித்து இத்தகவல் பரவி வருகிறது.
தாவூத் இப்ராஹிம் பற்றிய தகவல்களை பாகிஸ்தான் பல ஆண்டுகளாக மறைத்து வந்துள்ளது.
தீவிரவாத அமைப்புகள்
கராச்சியில் 6000 சதுர அடி பங்களாவில் தாவூர் மறைந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தன்னிடம் உள்ள பணத்தை போதை பொருள் கடத்தலுக்கும், ஐஎஸ் தீவிரவாத குழுக்களுக்கும் செலவு செய்து வருகிறார். தீவிரவாதிகளின் பாதுகாப்பு வளையத்திற்கு மறைந்து வாழ்ந்து வருகிறான் தாவூத்.
எல்லாம் வதந்தியா?
அதே நேரத்தில் இந்த தகவலை மறுத்துள்ளார் தாவூத் இப்ராகிமின் தம்பியும், தேடப்படும் குற்றவாளியுமான சோட்டா ஷகீல். 'தாவூத் பூரண நலமாக உள்ளார். எல்லாம் வதந்தி' என கூறியுள்ளார்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மரணமடைந்திருக்க வாய்ப்பு?
Reviewed by மறத்தமிழன்
on
April 29, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.