April 16, 2017
'அழைப்பை எதிர்பார்க்கவில்லை': ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி
தி.மு.க தலைமையில் சென்னையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்து உள்ளன. பா.ம.க நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து தி.மு.க நிர்வாகிகள் நேரில் அழைப்பு விடுத்தனர். பி.ஜே.பி-க்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தி.மு.க வெளிப்படையாக கூறி இருந்தது. அதற்கு பி.ஜே.பி மாநில தலைவர் தமிழிசை பதில் அளித்துள்ளார்.
ஒடிசா செல்லும் வழியில் , சென்னை விமான நிலையத்தில் தமிழிசை கூறுகையில், ''தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்துக்கான அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தி.மு.க-வுக்கு தார்மீக உரிமை இல்லை. விவசாயிகள் இவ்வளவு பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்றால் தமிழகத்தில் அதிக நாட்கள் ஆண்ட தி.மு.க.வும், அ.தி.மு.க-வும் தான் காரணம். தொலைநோக்கு திட்டம் இல்லாமல் விவசாயாத்தை சாகடித்து விட்டனர்.
இவர்களின் 50 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு குட்டிச்சுவராகி விட்டது. குறுகிய கண்ணோட்ட அரசியலால் தமிழக தாழ்ந்து போய் விட்டது. நதிகளை இணைக்கவில்லை. ஆறுகளை தூர் வாரவில்லை.
குளம், குட்டைகளை பேணி பாதுகாக்கவில்லை'' என்று கூறினார்.
'அழைப்பை எதிர்பார்க்கவில்லை': ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.