April 15, 2017
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளை அதிரவைத்த ஆபாசப் படம்!
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென விளம்பரத் திரைகளில் ஆபாசப்படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
டெல்லியில் ராஜீவ் செளக் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரத் திரைகளில் ஆபாச வீடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பாகியது. ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே ஓடிய அந்த வீடியோவால் பயணிகள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் அவர்களது மொபைல் போன்களில் படம்பிடித்து மெட்ரோ ரயில்வே துறையின் நிர்வாகத் திறனை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலைய வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏப்ரல் 9-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் தங்களுக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளது.
மேலும் நிர்வாகிகள் கூறுகையில், ‘தனியார் ஒப்பந்ததாரரிடமே விளம்பரத் திரைகள் தரப்பட்டுள்ளன. சம்பவத்தன்று விளம்பர சோதனை நடந்துள்ளது. அப்போது என்ன நடந்தது எனத் தெரியவில்லை’ என்றனர்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளை அதிரவைத்த ஆபாசப் படம்!
Reviewed by மறத்தமிழன்
on
April 15, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.