April 6, 2017
கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டியவர் கிரண்பேடி.. ஈவிகேஎஸ் இளங்கோவன் தடாலடி
கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டியவர் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டலடித்துள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் தொடர்ந்து முற்றி வருகிறது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி அரசு பொறுப்பேற்றவுடன் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்தே டெல்லியில் முதல்வருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடைபெற்ற மோதல் போன்றே புதுவையிலும் பிரச்சனை தொடங்கியது
பிரச்சனை முற்றிய நிலையில், அன்றாட நிர்வாக செயல்பாடுகளிலும் அது வெளிப்படையாக தெரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து துணை நிலை ஆளுநருக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாராயணசாமி கூட்டினார். இதனால் கடுப்பான கிரண்பேடி நான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போன்று செயல்பட முடியாது என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் புதுவை முதல்வர் நாராயணசாமியை நேரில் சென்று சந்தித்தார். சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டிய கிரண்பேடி புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுநராக வந்துள்ளார் என்று கிண்டலடித்தார்.
பின்னர், புதுவை முதல்வர் நாராயணசாமி ஒன்றும் செய்ய முடியாது என்றும் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்தார்.
கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டியவர் கிரண்பேடி.. ஈவிகேஎஸ் இளங்கோவன் தடாலடி
Reviewed by மறத்தமிழன்
on
April 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.