Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2017

வாட்ஸ்அப் பிரைவசி விவகாரம்: வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்


இந்தியாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் தனியுரிமை மீறப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, விசாரணை ஏப்ரல் 18-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவாகரம் குறித்த வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, அதன் விசாரணை ஏப்ரல் 18-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெஹர் மற்றும் நீதிபதி டி.வை. சந்திபாசுத் ஆகியோர் விசாரித்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் சாசன அமர்வு முன்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 18-ந்தேதியன்று நடைபெறவுள்ளது.

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் தனியுரிமை மீறப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே மத்திய அரசு மற்றும் டிராய் பதில்களை கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்வது குறித்து, வாட்ஸ்அப்பிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்து செப்டம்பர் 25, 2016க்கு முன் வாட்ஸ்அப் கணக்கை துவங்கிய வாடிக்கையாளர்களின் தரவுகளை பகிர்ந்து கொள்ளக் கூடாது என உத்தரவிட்டது.

ஏற்கனவே வாட்ஸ்அப் சார்பில் வழங்கப்பட்ட தகவல்களில் வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கு அழிக்கப்பட்டு விட்டால் அவரது தகவல்கள் வாட்ஸ்அப் சர்வர்களில் இருக்காது என தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.