Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2017

சர்ச்சைக்குரிய தெர்மோகோல் திட்டத்திற்கு நான் மட்டும் காரணம் இல்லை- செல்லூர் ராஜு அடடே


வைகை அணையில் தெர்மோகோல் மிதக்கவிட்டது ஏன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு விளக்கம் அளித்திருக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோல் மிதக்கவிட்டு சர்ச்சையில் சிக்கினார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு. சமூக வலைத்தளங்களில் கடுமையான கிண்டலுக்கும் கேலிக்கும் ஆனது அவரின் தெர்மோகோல் மிதக்கவிடும் திட்டம்.

சசிகலா மாஸ்டர் பிளான்..
இந்த நிலையில் தெர்மோகோல் திட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செல்லூர் ராஜூ கூறுகையில்
,
தெர்மோகோல் திட்டத்துக்காக சமூக வலைத் தளங்களில் எனக்கு பாராட்டும் கிடைத்துள்ளது. விமர்சனமும் கிடைத்துள்ளது. அது நானாக சுயமாக எடுத்த நவடிக்கை இல்லை.

அதிகாரிகளின் உரிய ஆலோசனைகள் பெற்றபிறகே எடுக்கப்பட்ட நவடிக்கை அது. தெர்மோகோல் திட்டம், நீர் ஆவியாவதைத் தடுக்க ஏற்கெனவே உலக நாடுகளில் உள்ள நடைமுறைத்திட்டம் தான்.
வெளி நாடுகளில் உள்ளதைப்போல, நீர் நிலைகளில் கறுப்புப் பந்துகள் மிதக்க விட்டு நீர் ஆவியாவதைத் தடுக்க அதிக செலவாகும் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.