Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2017

நடத்துநர் இல்லா பேருந்து! புதிய கண்டுபிடிப்பு


தற்போது புதிய புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து துறையிலும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் புதிய தொழில்நுட்பங்களின் தேவையும், புதிய கண்டுபிடிப்புகளின் அவசியமும் அதிக அளவில் தேவைப்படுகிறது.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு எப்போதும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

மனிதன் செய்த வேலைகளை இயந்திரம் செய்து வருகிறது.

மனிதசக்தியைப் பயன்படுத்தாமல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் காலம் இது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் தொடர்பியல்துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் கே.சண்முகபிரியா, பி.சர்மிளாராணி ஆகிய இருவரும் இணைந்து நடத்துநர் இல்லா பேருந்தினை கண்டுபிடித்துள்ளார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் அறிவியல் கழகம், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களின் திறனை வளர்க்கும் பொருட்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாதிரி வடிவமைப்பு போட்டியை நடத்தின.

இதில் தமிழகத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் (அனைத்துத் துறையினரும்) இணையதளம் மூலம் தங்களது புதிய கண்டுபிடிப்பின் மாதிரி வடிவமைப்புகளை அனுப்பி போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் 50 மாதிரி வடிவமைப்புகளை, வடிவமைத்தவர்களை போட்டிக்கு அழைத்தனர்.

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில், மாணவர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்பின் மாதிரி வடிமைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.

இதில் சிவகாசி பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்திருந்த நடத்துநர் இல்லா பேருந்து மூன்றாவது பரிசினைப் பெற்றது.

இந்த வடிவமைப்பு குறித்து இருமாணவிகள் கூறியதாவது:

"பேருந்து பயணிகளிடம் ரேடியோ அதிர்வெண் அடையாள அட்டை இருக்கும்.
இந்த அடையாள அட்டையில் பயணியின் பெயர், முகவரி, கைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இந்த அட்டைக்கு நாம் கைபேசிக்கு ரீசார்ஜ் செய்வது போல பேருந்து நிறுவனங்களில் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

பயணிகள் பேருந்தில் ஏறியதும், பேருந்தில் பொருத்தப்பட்டிருக்கும் ரேடியோ அதிர்வெண் அட்டையில்  பதிவாகியுள்ள விவரங்களை வாசிக்கும் கருவியில் தேய்த்து, எந்த இடத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்த பட்டனை அழுத்த வேண்டும். இதையடுத்து பயணிகளின் அட்டையிலிருந்து தேவையான கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு பேருந்து ஓட்டுநர் அருகே பாதுகாப்பான இடத்தில் 9 வோட் மின்மாற்றி, அல்லது பேட்டரி, மைக்ரோ கண்ட்ரோலர், ஐ.சி.ஆர்.ஜிப், டிஸ்பிளே உள்ளிட்டவை  கொண்ட வற்றை அமைக்க வேண்டும்.

இதில் உள்ள மென்பொருள் மூலம் இயக்கப்படும். இதன்மூலம் ஓட்டுநர் பயணி இறங்க உள்ள இடத்தினை டிஸ்பிளே மூலம் தெரிந்து கொள்வார். மேலும் பேருந்தில் படிக்கட்டு பயணம் செய்தால் ஐ.சி.ஆர்.கருவி மற்றும் சென்சார்கள் மூலம் பேருந்து இஞ்சின் வேகம் குறைந்து பேருந்து தானாகவே நின்றுவிடும். பயணி படிக்கட்டிலிருந்து பேருந்தினுள் வந்தால் மட்டுமே பேருந்து இயங்கும். பொதுவாக பேருந்துகளில் 10 மீட்டர் இடைவெளி விட்டுவரவும் என எழுதப்பட்டிருக்கும். இதனைக் கடைப்பிடிக்க பேருந்தில் ஒலி எழுப்பும் கருவி பொருத்தலாம்.

அல்ட்ரா சோனிக் சென்சார்கள் மூலம் 10 மீட்டர் தூரத்துக்குள் பேருந்து சென்றால் வேகம் குறைந்துவிடும். நாங்கள் கண்டு பிடித்திருக்கும் இந்த கருவி பேருந்து பயணத்தினை மிகவும் பாதுகாப்பாக்கிவிடும். எங்கள் கண்டுபிடிப்புக்கு மூன்றாம் பரிசு கிடைத்தமைக்கு எங்கள் வழிகாட்டி பேராசிரியர் டி.ரூபா, தாளாளர் ஆர்.சோலைச்சாமி உள்ளிட்டோர் பாராட்டினார்கள்'' என்றனர்.
-எஸ்.பாலசுந்தரராஜ்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.