April 24, 2017
இளநீரின் இனிய பயன்களை தெரிந்து கொள்வோமா !
இளநீரை காயச்சி அருந்துவது நலம்
இருமல் , உடல் வறட்சி, சுரம் போகும் காய்ந்தாறியவிளநீர் காசங் கபந்தீர்க்கும்.
விருப்பப்பட்ட நேரத்தில் இளநீரை அருந்த கூடாது. வழக்கமாக காலையில் இளநீர் அருந்துவதை பார்போம் ஆனால் அதில் நன்மை இல்லை. காலையில் இளநீரை அருந்துவதால் வயிற்றில் அமிலம் சுரப்பதை குறைத்துவிடும், பசி எடுப்பதை தடுத்துவிடும். வயிற்றில் எரிச்சல் உள்ளவர்களுக்கு காலையில் இளநீர் அருந்துவது சுகத்தை அளிப்பதாக இருந்தாலும் அது தற்காலிகமான சுகமே எனவே காலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
உணவை உண்டபின் அருந்துவதால் வாத, பித்தம் அதிகமாவதைத் தடுக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும், மலச் சிக்கல் நீங்கும். அதிக பசி உண்டாகும்.நோய் அணுகாது. உடல் மினுமினுக்கும். காலை, மதியம் உணவு உண்டபின் இளநீரை அருந்துவது நல்லது. இளநீரை எப்பொழுது வேண்டுமானாலும் அருந்துவதும், குளிர் காலங்களில் அருந்துவதும் நல்லது அல்ல.
வாதபித்த மீறாது, வன்பயித்தி யந்தீரும்
கோதின்மலஞ் சாரும், கொடும் பசியாம், மாதரசே
மிண்டியநோய் வாராது, மேனி மினுமினுக்கும்,
உண்ட பின்பு நல்விளநீ ருண்.
பச்சிளநீர் அருந்தினால் மேகம், பழைய சுரநோய்கள், கபம் இவற்றை நீக்கும், வயிற்றில் உண்டாகும் கிருமிகள், உடலில் எற்படும் யானை சொறி, கண்ணோய் இவற்றைப் போக்கும்.
பச்சிளநீர் மேகம் பழஞ்சுரங்க ளைப்போக்கும்,
கச்சுமுலை மாதே கபமறுக்கும், மெச்ச
வயிற்றிற் கிருமியொடு வன்சொறிகண் ணோயும்
அயர்த் தோடச் செய்யு மறி.
1.ஜீரணக் கோளாறுகளால் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் ஓர் கைகண்ட மருந்தாகும்.
2.உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது.
3.வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் இளநீரில் உள்ளன.
4.இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது.
5.இளநீர் குடல்புழுக்களை அழிக்கின்றது.
6.காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானம்.
7.சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்துகிறது.
8.ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்கின்றது.
9.சிறந்த சிறுநீர் பெருக்கி.
10.சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.
11.சிறுநீரக கிருமி நீக்கியாக செயல்படுகின்றது.
12.இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு உதவுகின்றது.
இளநீர் பயன்கள் :
இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர் மற்றும் ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.
தென்னை மரங்களில் பாளை பூ விரிந்த 2 வாரங்களில் ஆண் பூக்கள் மலர்ந்து உதிர்ந்துவிடும். 3-வது வாரம் முதல் பெண் பூக்கள் கருவுறுதல் நிகழ்ந்து பிஞ்சுகளாக வளர தொடங்கும்.
சுமார் 150 நாட்களில் இருந்து 180 நாட்களுக்குள் இளநீர் கிடைக்கும். மே மற்றும் ஜூன் மாதம் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நாட்களில் கோடைக்கு ஏற்ற இயற்கை பானமாக உள்ளது.
இளநீரின் மருத்துவக் குணங்கள்:
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் – உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.
இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.
இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
குறிப்பு:
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்
இளநீரின் இனிய பயன்களை தெரிந்து கொள்வோமா !
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 24, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.