April 16, 2017
உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் இயக்குநர் கவுதமன்!
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குநர் கவுதமன், உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் கடந்த 13ம் தேதி காலை, சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் சாலையில் பூட்டு போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுதமன் உள்ளிட்ட 7 பேரை பரங்கிமலை போலீசார் கைது செய்தனர்.
அனைவரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அன்று இரவே புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கவுதமன் மற்றும அவர் உடன் இருந்த ஆறு மாணவர்களும் சிறையில் இருந்தபடியே கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். சிறையில் அளிக்கும் உணவை சாப்பிட மறுத்தனர். உண்ணாவிரதத்தை கைவிடும்படி சிறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் கவுதமன் உள்ளிட்ட ஏழு பேரும் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக இன்று காலை அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் இயக்குநர் கவுதமன்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.