Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2017

ஓபிஎஸும் எடப்பாடியும் இணைய வேண்டும்.. தமிழிசையின் திடீர் ஆசை!


ஓபிஎஸும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைய வேண்டுட் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விருப்பம் தெரிவித்துள்ளார். அதிமுக மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் இதற்கெல்லாம் பாஜக தான் காரணம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதிமுகவை உடைத்து அதன்மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கூறிவருகின்றன.

தப்புமா தமிழகம்? ஓ.பி.எஸ்.VS எடப்பாடி நாளை நம்பிக்கை..
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சிப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓபிஎஸும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைய வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்று அவர் கூறினார்.

மேலும் அதிமுக மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் அவர் கூறினார். மேலும் வரும் 25ஆம் தேதி ஸ்டாலின் நடத்தும் கடையடைப்பு போராட்டத்தால் எந்தப்பயனும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.